உக்ரேய்ன் ஏதிலிகளுக்கு உதவும் நோக்கில் கனேடிய படையினர் போலந்துக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.
கனேடிய இராணுவத்தைச் சேர்ந்த சுமார் 150 படையினர் இவ்வாறு போலந்திற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கனடாவிற்குள் பிரவேசிக்க எத்தனிக்கும் உக்ரேய்ன் ஏதிலிகளுக்கு உதவுதல் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை வழங்க இவ்வாறு இராணுவம் அனுப்பி வைக்கப்பட உள்ளது.
எட்மோன்டன் மற்றும் கிங்ஸ்டன் பகுதியைச் சேர்ந்த படையினர் முதல் கட்டமாக அனுப்பி வைக்கப்பட உள்ளதாக பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்த் தெரிவித்துள்ளார்.