றொரன்டோவில் 286 கிலோ கிராம் எடையுடைய போதைப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
றொரன்டோ பொலிஸ் வரலாற்றில் ஒரே நாளில் மீட்கப்பட்ட அதி கூடிய போதைப் பொருள் இதுவெனத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்தப் போதைப் பொருள் கடத்தலுடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரில் 29 வயதான நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
189 கிலோ கிராம் கொக்கேய்ன் போதைப் பொருளும், 97 கிலோ கிராம் கிறிஸ்டல் மெதம்பொடைன் ஆகிய போதைப் பொருட்கள் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளன.
மீட்கப்பட்ட போதைப் பொருட்களின் மொத்தப் பெறுமதி சுமார் 28 மில்லியன் டொலர்கள் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.