Home இலங்கை ஒரு தோல்வியடைந்த நாடாக இலங்கை..

ஒரு தோல்வியடைந்த நாடாக இலங்கை..

by Jey

இலங்கை போன்ற அண்டை நாடுகளில் தேசத்தைக் கட்டியெழுப்பும் விடயங்கள் பெரும்பான்மையினரின் மதம் மற்றும் மொழியை அடிப்படையாகக் கொண்டிருப்பதால், இந்தியாவுக்கான அகதிகளின் வருகை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

சென்னை பல்கலைகழகத்தின் தென், தென்கிழக்காசிய கற்கை நெறிகளுக்கான சிரேஸ்ட பேராசிரியர் வீ.சூரியநாராயன் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கை, பங்களாதேஸ் மற்றும் மியன்மார் போன்ற நாடுகளில் சிறுபான்மையினர் பாகுபாட்டுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள்.

எனவே அவர்கள் இந்தியாவிற்கு வர விரும்புகிறார்கள், இந்திய தேசத்தின் புகலிடம் வழங்கும் சாதனை ஆரம்ப காலத்திலிருந்தே மிகவும் தாராளமாக இருந்ததே இதற்கான காரணம் என்று கட்டுரையாளர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தமிழர்களை சமமான குடிமக்களாகக் கருதி, அவர்களுக்கு ஜனநாயக உரிமை வழங்கப்படாவிட்டால், அவர்கள் தீவு தேசத்தில் தமக்கு பாதுகாப்பு இருப்பதாக உணர மாட்டார்கள் என்பதை ராஜபக்ச சகோதரர்கள் எப்போது உணர்வார்கள்?

வடமாகாணத்தில் உள்ள தமிழர்கள் தமது பிள்ளைகளுக்கு பால் கூட வாங்க முடியாத நிலையில் உள்ளனர்.

உயிர்காக்கும் மருந்துகள் அரிதாகிவிட்டன. எரிபொருள் விநியோகத்தில் உதவுமாறு இராணுவம் கோரப்பட்டுள்ளது.

பெரிய மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

மன்னார் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏறக்குறைய 2000 பேர் கூடி, படகுகளில் ஏறி இந்தியாவுக்கு வருவதற்காகக் காத்திருப்பதாக இலங்கையில் உள்ள தகவலறிந்த தரப்புக்கள் தெரிவிக்கின்றன.மெதுவாக ஒரு தோல்வியடைந்த நாடாக மாறி வருகிறது.

related posts