மிகவும் சிரமத்தில் வேலை கிடைக்காமல் இருந்த உயரம் குறைந்த வாலிபருக்கு சமூக வலைதள பதிவு காரணமாக, 35 நிறுவனங்கள் வேலைக்கு அழைப்பு விடுத்துள்ளன.
மத்திய பிரதேசத்தில் உள்ள குவாலியரை சேர்ந்த அங்கேஷ் கோஷ்தி, 3.7 அடி உயரம் கொண்டவர். அதனால், குழந்தைப் பருவத்தில் இருந்தே கேலி,கிண்டலுக்கு ஆளானார். ஆனால், இதை மீறிஅவர் பட்டப் படிப்பை முடித்து, 2020லிருந்து வேலை தேடி அலைகிறார். அவரது உயரம் காரணமாக எங்குமே வேலை கிடைக்கவில்லை.
இந்நிலையில், அங்கேஷ் கோஷ்தி பற்றி அறிந்த குவாலியர் தெற்கு தொகுதி காங்., – எம்.எல்.ஏ., பிரவின் பதாக், அங்கேஷ் பற்றி ‘வீடியோ’ எடுத்து, சமூக வலைதளத்தில் வெளியிட்டார். அந்த வீடியோவை ஏராளமானோர் பகிர்ந்து இருந்தனர்.
அடுத்த சில மணிநேரத்தில், அங்கேஷ் கோஷ்திக்கு வேலை தர பல நிறுவனங்கள் முன் வந்தன. இதுவரை 35 நிறுவனங்கள் அங்கேஷை ‘இன்டர்வியூ’வுக்கு அழைத்துள்ளன. இதனால் அங்கேஷ் மட்டுமின்றி அவரது பெற்றோரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.