Home இந்தியா நாலந்தா மாவட்டத்தில் 2,500 ஆண்டுகளுக்கு முந்தைய கற்சுவர்

நாலந்தா மாவட்டத்தில் 2,500 ஆண்டுகளுக்கு முந்தைய கற்சுவர்

by Jey

பீஹாரின் நாலந்தா மாவட்டத்தில் உள்ள 2,500 ஆண்டுகளுக்கு முந்தைய 40 கி.மீ., நீளமுள்ள கற்சுவரை, ‘யுனெஸ்கோ’வின் உலக பாரம்பரிய சின்னங்கள் பட்டியலில் சேர்க்க, மாநில அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

பீஹாரின் நாலந்தா மாவட்டத்தில் மலைகள் சூழ்ந்த ராஜ்கிர் நகரை பாது காக்கும் வகையில், 40 கி.மீ., நீளமுள்ள மிக பழமையான கற்சுவர் உள்ளது.

இந்த கற்சுவரை, யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக பட்டியலிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறைக்கு மாநில அரசு பரிந்துரை செய்துள்ளது.

இதுகுறித்து, பீஹார் தொல்லியல் துறை இயக்குனர் தீபக் ஆனந்த் கூறியதாவது: நாலந்தா மாவட்டத்தின் ராஜ்கிர் நகரில் மிக பழமை வாய்ந்த, 40 கி.மீ., நீள கற்சுவர் அமைந்துள்ளது.

இந்நகரை எதிரி நாட்டு படைகளிடம் இருந்து காப்பாற்ற, கி.மு., 3ம் நுாற்றாண்டுக்கு முன் இச்சுவர் கட்டப்பட்டது.இதை யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னங்களுள் ஒன்றாக பட்டியலிடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

related posts