கனடாவில் இலத்திரனியல் கார்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
எரிவாயுவின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்லும் காரணத்தினால் இலத்திரனியல் வாகனங்களுக்கான கிராக்கி அதிகரித்துள்ளது.
இலத்திரனியல் வாகனங்களுக்கான கேள்வியை நிரம்பல் செய்வதற்கு போதியளவு உற்பத்தி செய்யப்படவில்லை என உற்பத்த்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த மாதம் அநேகமான மாகாணங்களில் ஒரு லீற்றர் எரிவாயுவின் விலை இரண்டு டொலர்களை கடந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அதிக எண்ணிக்கையிலான வாகடிக்கையாளர்கள் இலத்திரனியல் வாகனங்களை கொள்வனவு செய்ய காத்திருப்பதாக வாகன உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.