ஸ்காப்ரோவல் தொழுகையை முடித்துக் கொண்டு வாகனத் தரிப்பிடத்திற்கு திரும்பிய ஐந்து பேர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
ரமழான் தொழுகையை முடித்துக் கொண்டு உணவு உட்கொள்வதற்காக எந்த இடத்திற்கு செல்வது என பேசிக் கொண்டிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
மார்க்ம் வீதி லோரன்ஸ் அவன்யூவிற்கு அருகாமையில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த தாக்குதல் சம்பவத்தில் நான்கு பேர் காயமடைந்துள்ளதுடன் மேலும் ஒருவர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக றொரன்டோ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
எழுமாறான அடிப்படையில் குறித்த இளைஞர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடாத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் ஊகம் வெளியிட்டுள்ளனர்.