கோவிட் காரணமாக தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளது.
ஒரு மாத கால இடைவெளியின் பின்னர் கனடாவில் கோவிட் தொற்று உறுதியாளர்களில் 200க்கும் மேற்பட்டவர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நாள் தோறும் பதிவாகும் தொற்று உறுதியாளர் எண்ணிக்கை சராசரியாக ஒரு லட்சம் என சுகாதார தரப்பினர் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள 202 நோயாளிகளில் 100 பேருக்கு செயற்கை சுவாசம் வழங்கப்படுகின்றது என தெரிவிக்கப்படுகின்றது.