Home உலகம் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த நாய்

உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த நாய்

by Jey

அமெரிக்காவில் கின்னஸ் உலகசாதனை புத்தகத்தில் இடம்பிடித்த செல்லப்பிராணியின் வீடியோ, இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட நிலையில், தற்போது வைரலாகி வருகிறது.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் சிஹுவாஹுவா வகையை சேர்ந்த நாய் ஒன்று 21 வயது 66 நாட்களை கடந்து அதிக நாட்கள் உயிர் வாழ்ந்த நாயாக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது. இந்த நாய் “உலகின் மிகப் பழமையான நாய்” என்றும் அழைக்கப்படுகிறது.

இந்த நாய் அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள க்ரீனாக்ரேஸின் கிசெலா ஷோர் என்பவருக்கு சொந்தமானது. அவர் நாயை ஷோர் “இனிமையான, மென்மையான மற்றும் அன்பான செல்லப்பிராணி என்று தெரிவித்தார். மேலும், சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் கின்னஸ் அமைப்பு பதிவிட்டதை பகிர்ந்த அவர், தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

சிஹுவாஹுவா சராசரி ஆயுட்காலம் 12 முதல் 18 ஆண்டுகள் வரை இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. தனது செல்லப்பிராணி 20 வயதை கடந்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றிருப்பதை தனது உறவினர்களிடமும், நண்பர்களிடமும் மகிழ்ச்சியுடன் தெரிவித்து வருகிறார்.

related posts