தென்ஆப்பிரிக்கா நாட்டில் குவாஜுலு-நேட்டல் மாகாணத்தில் கடந்த வாரம் திங்கட்கிழமையில் இருந்து கனமழை பெய்து வருகிறது. இதனால், பல்வேறு நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.
கனமழையால் சாலைகள், வீடுகள், பள்ளி கூடங்கள், மின் கம்பங்கள் மற்றும் பல அரசு கட்டிடங்கள் சேதமடைந்து உள்ளன. கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.
அந்நாட்டின் தென்கிழக்கே அமைந்த குவாஜுலு-நேட்டல் மாகாணத்தில் தொடர் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 443 ஆக உயர்ந்து உள்ளது.
இந்நிலையில் அந்நாட்டின் அதிபர் ரமபோசா தென் ஆப்பிரிக்காவில் பேரிடர் அவசர நிலை பிரகடனம் அறிவித்துள்ளார்.
மேலும் அவர் மூன்று கட்ட திட்டத்தை அறிவித்துள்ளார் .
பாதிக்கப்பட்ட அனைவரும் பாதுகாப்பாக இருப்பதையும் அவர்களின் அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்படுவதையும் உறுதிசெய்து, உடனடி மனிதாபிமான நிவாரணத்தில் கவனம் செலுத்துவோம்.
இரண்டாவதாக, நிலைப்படுத்துதல் மற்றும் மீட்பது, வீடுகளை இழந்த மக்களை மீண்டும் குடியமர்த்துதல் மற்றும் சேவைகளை வழங்குதல் ஆகியவற்றில் கவனம் செலுத்துவோம்.
மூன்றாவதாக, உள்கட்டமைப்பு உட்பட அழிக்கப்பட்ட மற்றும் அழிக்கப்பட்ட பல பகுதிகளை புனரமைப்பு மற்றும் மறுகட்டமைப்பதில் கவனம் செலுத்துவோம், ”என்று ரமபோசா கூறினார்