Home கனடா ரஸ்ய ஜனாதிபதியின் புதல்விகளுக்கு கனடா தடை விதிப்பு

ரஸ்ய ஜனாதிபதியின் புதல்விகளுக்கு கனடா தடை விதிப்பு

by Jey

ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் புதல்வியருக்கு கனடா தடை விதிப்பதாக அறிவித்துள்ளது.

உக்ரேய்னுடனான போர் காரணமாக கனேடிய அரசாங்கம் ஏனைய மேற்குலக நாடுகளுடன் இணைந்து ரஸ்யா மீது தடைகளை அறிவித்து வருகின்றது.

அந்த வகையில் ரஸ்யா மீது மற்றுமொரு தடையை விதிப்பதற்கு கனேடிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

மாரினா வொர்னட்சோவா மற்றும் கத்ரீனா திகனோவா ஆகிய புட்டினின் இரண்டு புதல்வியருக்கும் இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது.

விசேட பொருளாதார நடவடிக்கைகள் சட்டத்தின் கீழ் இந்த தடைகள் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சில வாரங்களுக்கு முன்னதாக குறித்த இரண்டு பெண்களுக்கு எதிராகவும் அமெரிக்கா தடை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

related posts