திருநெல்வேலி மாவட்டம் உவரியில் சுற்றித் திரிந்த அமெரிக்க பிரஜையிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழகம் மற்றும் புதுச்சேரி காரைக்கால் உள்ளிட்ட இடங்களுக்கு சென்றுள்ள அவர் நேற்று(ஏப்.,19) தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு வந்துள்ளார்.
இன்று திருநெல்வேலி மாவட்டம் உவரி கடற்கரையில் நின்று கொண்டிருந்த போது போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அவரது விசா காலம் முடிந்து விட்டது.
எனவே அவர் அமெரிக்க உளவாளியா எதற்காக வந்தார் என்பது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.