மார்ச் மாத பணவீக்கம் 6.7 வீதமாக பதிவாகியுள்ளது என கனேடிய புள்ளி விபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடந்த பெப்ரவரி மாதம் பணவீக்கம் 5.7 வீதமாக காணப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மார்ச் மாதம் எரிபொருட்களின் விலைகள் அதிகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
எரிவாயு விலைகள் கடந்த ஆண்டின் மார்ச் மாதத்துடன் ஒப்பீடு செய்யும் போது 39.8 வீதத்தினால் உயர்வடைந்துள்ளது.
உக்ரேய்ன் யுத்தம் உணவு மற்றும் எரிபொருள் விலையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
1991ம் ஆண்டின் பின்னர் முதல் தடவையாக கனடாவில் கூடுதல் எண்ணிக்கையில் பணவீக்க வீதம் இம்முறை பதிவாகியுள்ளது.