Home உலகம் முதன் முதலாக ஹெலிகாப்டரை இயக்கி நாசா வரலாற்று சாதனை

முதன் முதலாக ஹெலிகாப்டரை இயக்கி நாசா வரலாற்று சாதனை

by Jey

செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா கடந்த 2020 ஆம் ஆண்டு பெர்சவரன்ஸ் ரோவரை அனுப்பியது.

கடந்த வருடம் பிப்ரவரி மாதம் செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறங்கிய பெர்சவரன்ஸ் ரோவர், செவ்வாய் கிரகத்தை படம் பிடித்து பூமிக்கு அனுப்பியது.

மேலும், மண் துகள்கள் உள்ளிட்ட மாதிரிகளையும் பெர்சவரன்ஸ் ரேவர் சேகரித்து வருகிறது. பெர்சவரன்ஸ் ரேவருடன் சிறிய அளவிலான ஹெலிகாப்டர் ஒன்றும் இணைத்து அனுப்பப்பட்டது.

இன்ஜெனியூனிட்டி எனப் பெயரிடப்பட்டுள்ள 1.8 கிலோ எடையுள்ள ஹெலிகாப்டர் கடந்த ஆண்டு ஏப்ரல் 19ஆம் தேதி செவ்வாயின் மேற்பரப்பில் இருந்து 10 அடி உயரம் வெற்றிகரமாகப் பறந்து சரித்திர சாதனையை படைத்தது.

பூமியைத் தவிர மற்றொரு கிரகத்தில், முதன்முதலாக ஹெலிகாப்டரை இயக்கி நாசா வரலாற்று சாதனை படைத்தது. தற்போது இந்த சரித்திர சாதனை படைக்கப்பட்டு ஓராண்டு நிறைவு பெற்றுள்ளதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

 

related posts