கனடாவில் கோவிட் தடுப்பூசிகள் காலாவதியாகும் அபாயம் நிலவி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த மாத இறுதியளவில் பெருமளவிலான கோவிட் தடுப்பூசிகள் இவ்வாறு காலாவதியாக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 14ம் திகதி பதினான்கு மில்லியன் கோவிட் தடுப்பூசிகள் களஞ்சியச்சாலைகளில் காணப்படுவதாக கனேடிய பொதுச் சுகாதார முகவர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சுமார் 430,000 மொடர்னா தடுப்பூசிகள் இந்த மாத இறுதியில் காலாவதியாகும் என தெரிவித்துள்ளது.
கடந்த மாதமும் சுமார் பெருமளவு மொடர்னா தடுப்பூசிகள் விரயமாக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.