Home இலங்கை சர்வதேச நிதியுதவி கிடைப்பதற்கு சுமார் ஆறு மாதம் காலம் செல்லும்

சர்வதேச நிதியுதவி கிடைப்பதற்கு சுமார் ஆறு மாதம் காலம் செல்லும்

by Jey

சர்வதேச நாணய நிதியம் வழங்கும் நிதியுதவி கிடைப்பதற்கு சுமார் ஆறு மாதம் காலம் செல்லும் எனவும் அந்த நிதியுதவி பகுதிப் பகுதியாக கிடைக்கும் என்பதுடன் அந்த நிதியுதவி கிடைக்கும் வரை மக்களுக்கான அத்தியவசிய பொருட்களை பெற்றுக்கொள்ள தேவையான நிதியுதவியை தேடிக்கொள்ள வேண்டும் எனவும் வெளிவிவகார அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு எரிபொருளை கொள்வனவு செய்வதற்காக மேலும் 500 மில்லியன் டொலர் நிதியுதவியை வழங்க இந்தியா இணக்கம் தெரிவித்துள்ளது என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இதனை தவிர பங்களாதேஷ் நாட்டுக்கு செலுத்த வேண்டிய 450 மில்லியன் டொலரை திரும்ப செலுத்த கால அவகாசத்தை வழங்க அந்நாடு இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக நாட்டில் சமூக ரீதியாக பெரும் நெருக்கடியான நிலைமைகள் உருவாகியுள்ளன. பண வீக்கம், பொருட்களின் விலைகள் அதிகரிப்பு, எரிபொருள், சமையல் எரிவாயு தட்டுப்பாடுகள் காரணமாக நாட்டில் மக்கள் மத்தியில் போராட்டங்கள் வெடித்துள்ளன.

அதேவேளை இலங்கை இதுவரை சுமார் பல பில்லியன் டொலர்களை கடனாக பெற்றுள்ளதுடன் அவற்றை திரும்ப செலுத்துவதிலும் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.

 

 

related posts