Home இலங்கை இலங்கையில் மின் உற்பத்தி நிலையம் செயலிழக்கும் அபாயத்தில்

இலங்கையில் மின் உற்பத்தி நிலையம் செயலிழக்கும் அபாயத்தில்

by Jey

நுரைச்சோலை லக்விஜய மின் உற்பத்தி நிலையம் எந்த நேரத்திலும் செயலிழக்கும் அபாயத்தில் உள்ளதென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மின் நெருக்கடி காரணமாக நுரைச்சோலை லக்விஜய மின் உற்பத்தி நிலையம் தொடர்ச்சியாக மின்சாரத்தை உற்பத்தி செய்ய வேண்டியுள்ளமையால் சுமார் 15 அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளது. இதனால் மின் உற்பத்தி நிலையம் எந்த நேரத்திலும் செயலிழக்கும் அபாயம் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த மின் உற்பத்தி நிலையங்கள் மூன்று 300 மெகாவோட் இயந்திரங்கள் மூலம் தேசிய கட்டமைப்பிற்கு சுமார் 900 மெகாவோட்களை சேர்க்கின்றன. மேலும் ஒவ்வொரு அமைப்பிலிருந்தும் அவ்வப்போது அகற்றி பராமரிப்பது வழக்கமான நடைமுறை என்று இலங்கை மின்சார சபை பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நாட்டில் நிலவும் கடும் வறட்சி காரணமாக நீர்மின் உற்பத்தி குறைந்தளவிலேயே குறைந்துள்ளதுடன், அனல் மின் நிலையங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் அன்றாட மின் தேவைக்கு போதுமானதாக இல்லை.

இதனால் நிலக்கரி அனல்மின் நிலையத்தின் மூலம் உற்பத்தியாகும் மெகாவோட் மின்சாரம் முழுவதையும் தேசிய மின்கட்டமைப்பில் சேர்க்க வேண்டியுள்ளதால், கடந்த சில மாதங்களாக இந்த இயந்திரங்களை தொடர்ந்து இயக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இவ்வாறான சூழலில் நுரைச்சோலை நிலக்கரி மின் உற்பத்தி நிலையம் திடீரென செயலிழந்தால் அதற்கு தாம் பொறுப்பேற்க தயாரில்லை எனவும் பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

related posts