உக்ரேய்ன் பிரஜைகளுக்கு எதிரான குற்றச் செயல்கள் குறித்து கனேடிய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
உக்ரேய்ன் கனேடியர்கள் மற்றும் ரஸ்ய படையெடுப்புக்கு எதிராக குரல் எழுப்பும் நபர்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்படும் அடக்குமுறைகள் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
நாட்டின் பல பகுதிகளில் இவ்வாறான சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக உக்ரேய்னிய கனேடிய காங்கிரஸின் Alexandra Chyczij தெரிவித்துள்ளார்.
அண்மைய நாட்களில் இடம்பெற்று வரும் இவ்வாறான சம்பவங்கள் பெரும் கவலையளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.