Home இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில்

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில்

by Jey

நல்லாட்சி அரசாங்கம் நாட்டை ஒப்படைத்த போது 7 ஆயிரத்து 799 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கையிருப்பிலிருந்ததாகவும், அது தற்பொழுது பூஜ்ஜியமாகக் குறைந்துள்ளதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

அத்துடன், நல்லாட்சி அரசாங்கம் விலை கட்டுப்பாட்டைக் கொண்டிருந்ததாகவும், வாழ்க்கைச் செலவுக்குறைப்பு குழு ஒன்று அமைக்கப்பட்டிருந்ததாகவும் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

”இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததிலிருந்து உள்ள நிலை எல்லோருக்கும் தெரியும். ஆனால் இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்து சிறிது காலத்திலேயே எமது கையிருப்புக்கள் வீழ்ச்சியடைந்தன என கூறினார்.

related posts