பாப்பாண்டவரின் வருகைக்காக காத்திருப்பதாக பழங்குடியின மக்கள் அறிவித்துள்ளனர்.
வதிவிடப் பாடசாலைகளில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் பழங்குடியின மக்களிடம் பாப்பாண்டவர் அண்மையில் மன்னிப்பு கோரியிருந்தார்.
பாப்பாண்டவரின் மன்னிப்பு கோரல் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதன் முதல் படியாகும் என பழங்குடியினப் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு மன்னிப்பு கோரப்பட்டமை சிலருக்கு வரலாற்று ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்தது என அவர்கள் தெரிவிக்கின்றனர்.
எவ்வாறெனினும் குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறுதல் விவகாரத்தில் இன்னமும் பல்வேறு விடயங்கள் செய்யப்பட வேண்டியுள்ளதாகவும் கத்தோலிக்க தேவாலயங்களிடம் அதனை எதிர்பார்ப்பதாகவும் மற்றுமொரு தரப்பு பழங்குடியினத்தவர்கள் தெரிவித்துள்ளனர்.