Home இந்தியா கொதித்துக் கொண்டிருந்த ரசத்தில் தவறி விழுந்த 5 வயது சிறுவன்

கொதித்துக் கொண்டிருந்த ரசத்தில் தவறி விழுந்த 5 வயது சிறுவன்

by Jey

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே, கோட்டை பழவஞ்சி கிராமத்தில் உள்ள உறவினர் இல்ல நிச்சயதார்த்த விழாவுக்கு, பொன்னாங்கொம்பு கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணன் என்பவர் குடும்பத்துடன் சென்றார்.

மணப்பறையில், உறவினர் வீட்டு விசேஷத்துக்கு சென்ற போது, ரசத்துக்குள் தவறி விழுந்த 5 வயது சிறுவன் பரிதாபமாக இறந்தான்.

நேற்று, விசேஷ வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த கிருஷ்ணனின் 5 வயது மகன் சுதர்ஸன், சமைத்து வைக்கப்பட்டிருந்த ரசத்தில் தவறி விழுந்தார்.

கொதித்துக் கொண்டிருந்த ரசத்தில் தவறி விழுந்ததால், படுகாயமடைந்த சிறுவன், அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான்.

அங்கு சிகிச்சை பலனின்றி சிறுவன் இறந்ததால், வளநாடு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

related posts