கோவிட் தடுப்பூசி ஏற்றாதவர்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசி ஏற்றிக் கொள்ளாதவர்களின் எண்ணிக்கை உயர்வினால் தடுப்பூசி ஏற்றிக் கொண்டவர்களுக்கு நோய்த் தொற்று பரவும் ஆபத்து அதிகரித்துள்ளது.
அண்மையில் நடாத்தப்பட்ட ஆய்வுகளின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
கனேடிய சுகாதாரப் பேரவையினால் இந்த ஆய்வு நடாத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தடுப்பூசி ஏற்றிக் கொண்டவர்கள் தடுப்பூசி ஏற்றிக் கொள்ளாதவர்களுடன் கலப்பதனால் கூடுதல் எண்ணிக்கையில் நோய்த் தொற்று ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, தடுப்பூசி ஏற்றிக் கொள்ளாதவர்கள் தடுப்பூசி ஏற்றிக் கொண்டவர்களுடன் இருப்பதனால் அவர்களு;க்கு நோய்த் தொற்று ஏற்படும் சாத்தியம் குறைவதாக தெரிவிக்கப்படுகின்றது.