ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவையும் அரசாங்கத்தையும் பதவியில் இருந்து அகற்றுவதற்கான வீதிப்போராட்டங்களை ஐக்கிய மக்கள் சக்தி நாளை ஆரம்பிக்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இலங்கை இதுவரை கண்டிராத மிகப்பெரிய எதிர்ப்பு பேரணி கண்டியில் இருந்து இன்று ஆரம்பமாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் பெர்னாண்டோ செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
தலதா மாளிகையில் இருந்து ஆரம்பிக்கப்படும் இந்த பேரணி மே 1 ஆம் திகதி கொழும்பை அடையவுள்ளது.
இந்த அரசாங்கத்தை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்கான போராட்டத்திற்கான நேரம் இது. எனவே மே 1ஆம் திகதி அன்று தாம் என்ன செய்யப் போகிறோம் என்பதை அனைவரும் பார்க்க முடியும் என்று அவர் கூறியுள்ளார்.
ஒவ்வொரு போராட்டக்காரர்களும் கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டாலும் தமது போராட்டம் தொடரும் என்றும் பெர்ணான்டோ குறிப்பிட்டார்.