Home இந்தியா பழங்குடியின மக்கள் மத்தியில் பெரும் சோகம்

பழங்குடியின மக்கள் மத்தியில் பெரும் சோகம்

by Jey

கேரளா வயநாடு மாவட்டம், மேப்பாடி அருகே நேற்று, தொழிலாளர் சிலர் நிலம்பூர் வனத்தில் மரத்தில் கயிறு கட்டி ஏறி, தேன் சேகரித்து கொண்டிருந்தனர்.

கேரள மாநிலம் நிலம்பூர் வனப்பகுதியில், தேன் எடுக்க சென்ற தொழிலாளி மற்றும் கைக்குழந்தை இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

அப்போது ராஜன்,47, என்பவர் மரத்தில் இருந்து தவறி விழுந்தார். அவரை காப்பாற்ற செல்லும்போது, சுனில் என்பவர் தனது, நான்கு- மாத ஆண் குழந்தையை துாக்கி கொண்டு ஓடியுள்ளார்.

ஆற்றை கடந்தபோது தவறி கைக்குழந்தை பாறையின் மீது விழுந்து காயமடைந்தது.

காயமடைந்த இருவரையும் மீட்டு, பரிசோதனை செய்ததில் ராஜனும், குழந்தையும் உயிரிழந்தது தெரியவந்தது.மீட்பு குழுவினர் இருவரின் சடலத்தை மீட்டு, பாடிவயல் மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.

இந்த சம்பவம், பழங்குடியின மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

related posts