றொரன்டோ உயர்நிலைப் பள்ளியின் எதிரில் மாணவர் ஒருவர் மீது கத்தி குத்துப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
றொரன்டோ மாவட்ட பாடசாலைச் சபை உயர்நிலைப் பள்ளிக்கு எதிரில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பிரிச்மவுன்ட் மற்றும் கிங்ஸ்டன் வீதியில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
படுகாயமடைந்த நிலையில் மாணவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மாணவரின் பெயர் மற்றும் வயது விபரங்கள் எதனையும் பொலிஸார் வெளியிடவில்லை.
இந்த சம்பவத்துடன் மூன்று சந்தேக நபர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என பொலிஸார் ஊகம் வெளியிட்டுள்ளனர்.