ஒன்றாரியோ மாகாணத்தில் கோவிட் தொற்று உறுதியாளர் வைத்தியசாலை அனுமதிகளில் அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மாகாணத்தில் கோவிட் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகி வரும் நிலையில், நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலைகளில் அனுமதியாகும் எண்ணிக்கையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளது.
இந்த வாரத்தில் 1455 பேர் கோவிட் காரணமாக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இது கடந்த வாரத்துடன் ஒப்பீடு செய்யும் போது 12 வீத அதிகரிப்பாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.