பாகிஸ்தானின் கராச்சி பல்கலை வளாகத்தில், நேற்று சக்தி வாய்ந்த குண்டு வெடித்து, மூன்று சீனர்கள் உட்பட நால்வர் உயிரிழந்தனர்.
நம் அண்டை நாடான பாகிஸ்தானின் கராச்சியில் இருக்கும் கராச்சி பல்கலையில் ஏராளமான வெளிநாட்டினரும் படிக்கின்றனர். இங்கு சீன மொழி கற்பிக்கும் கன்பூசியஸ் மையம் உள்ளது.
நேற்று, இதன் அருகே நிறுத்தப்பட்டு இருந்த வேன், திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது.
சக்தி வாய்ந்த இந்த குண்டு வெடிப்பில் மூன்று சீனர்கள் உட்பட நான்கு பேர் உயிரிழந்தனர்.
அவர்களில் இருவர் பெண்கள். இச்சம்பவம் பாக்., முழுதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாக்., பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனமும்,
வருத்தமும் தெரிவித்துள்ளார். விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.