ரஸ்யா மீது மேலும் தடைகளை விதிப்பதாக கனேடிய அரசாங்கம் அறிவித்துள்ளது.
ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கு விசுவாசமான 200 பேருக்கு இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது.
உக்ரேய்ன் மீது தாக்குதல் நடாத்தி வருவதனை கண்டித்தே இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக டொன்பாஸைச் சேர்ந்த முக்கியஸ்தர்களுக்கு இவ்வாறு கனேடிய அரசாங்கம் தடை விதித்துள்ளது.
உக்ரேய்னின் எல்லையை புட்டினும் அவரது சகாக்களும் மீள் நிர்ணயம் செய்ய முயற்சிப்பதாகவும் அதனை கனடா வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது என தெரிவித்துள்ளது.
கனேடிய வெளிவிவகார அமைச்சு அறிக்கை ஒன்றின் மூலம் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளது.