ஒன்றாரியோ மக்களுக்கு வரிச் சலுகை வழங்குவதாக மாகாண முதல்வர் டக் போர்ட் வாக்குறுதி அளித்துள்ளார்.
ஆண்டு வருமானம் 50000 டொலர்களுக்கும் குறைவ்வாக காணப்படுவோருக்கு வரிச் சலுகைகளை வழங்குவதற்கு திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் குறித்த நடைமுறை அமுல்படுத்தப்பட உள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
டக் போர்ட் தலைமையிலான அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தினால் 1.1 மில்லியன் மக்கள் சராசரியாக 300 மில்லியன் டொலர் வரிச் சலுகை பெற்றுக்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.