Home இந்தியா அரசு பணியிடங்களில் தினமும் யோகா

அரசு பணியிடங்களில் தினமும் யோகா

by Jey

அரியானா மாநில அரசு, அதன் அனைத்து துறைகள், வாரியங்கள் மற்றும் கார்ப்பரேஷன்களுக்கு ஒரு ஆலோசனையை வெளியிட்டுள்ளது.

அதில் யோகாவை ஊக்குவிக்கும் பொருட்டு, அரசு பணியிடங்களில் தினமும் 15 முதல் 20 நிமிடங்கள் யோகா இடைவேளை (ஒய்-பிரேக்) வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.

இதனால் ஊழியர்களின் மன அழுத்தம் குறைக்கவும், புத்துணர்ச்சி பெறவும் முடியும்.இது தொடர்பாக அரியானா கூடுதல் செயலாளர் (சுகாதாரம்) எழுதியுள்ள கடிதம் அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

மத்திய பணியாளர்கள் மற்றும் பயிற்சித் துறையானது, அனைத்து மத்திய அரசின் அமைச்சகங்கள் மற்றும் துறைகளுக்கு ஒய்-பிரேக் ஐ தங்கள் பணியாளர்களிடையே பிரபலப்படுத்த வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.

அதன்படி, ஒய்-பிரேக் செயலியை தங்கள் அலுவலகங்களில் செயல்படுத்துமாறு மாநில அரசுகளுக்கு அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.

அமைச்சகம் மற்றும் அரியானா அரசின் உத்தரவுப்படி, அனைத்து துறைகள், வாரியங்கள் மற்றும் கார்ப்பரேஷன்கள், தங்கள் அலுவலகங்களில் ஒய்-பிரேக் செயலி வாயிலாக, யோகா இடைவேளை பயிற்சியை நடைமுறைப்படுத்துவதற்கான வழிமுறைகளை வழங்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதன்மூலம், தனிநபர்களின் மன அழுத்தத்தைத் தணிக்கவும், புதுப்பிக்கவும், ஆரோக்கியமான வாழ்க்கையை மேம்படுத்தவும், உற்பத்தித்திறனை அதிகரிக்கச் செய்யவும் முடியும் என்று நிரூபனமாகியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

related posts