உக்ரேய்ன் தீவிரவாதிகளுக்கு கனடா பயிற்சி வழங்கியதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
கனேடிய இராணுவப் படையினர், உக்ரேய்ன் தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளித்துள்ளதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்த விவகாரம் தொடர்பில் விரிவான விசாரணகைள் நடாத்தப்பட வேண்டுமென நிபுணர்கள் கேரிக்கை விடுத்துள்ளனர்.
இதேவேளை, உக்ரேய்ன் படையினருக்கு பயிற்சி வழங்கிய போதிலும் தீவிரவாதிகளுக்கு பயற்சி அளிக்கவில்லை என கனேடிய இராணுவும் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் எவ்வித தகவல்களும் தெரியவில்லை என மேலும் குறிப்பிட்டுள்ளது.
வேறும் நாடுகளைச் சேர்ந்த படையினருக்கு பயிற்சி அளிக்கப்படும் போது அவர்களின் பின்னணி பற்றி ஆராயும் தேவை கனேடிய இராணுவத்திற்கு கிடையாது என சுட்டிக்காட்டியுள்ளது.