உக்ரேய்னில் மீண்டும் தூதரகத்தை திறப்பது குறித்து கனடா கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஏனைய நேச நாடுகளின் வழியில் கனடாவும் விரைவில் தூதரகத்தை திறக்கும் என வெளிவிவகார அமைச்சர் மெலெய்ன் ஜோலி தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் நாட்களில் அல்லது எதிர்வரும் வாரங்களில் தூதரகம் திறக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பணியாளர்களுக்கு பாதுகாப்பான சூழ்நிலை உருவாக்கப்பட்டதும் தூதரகத்தின் பணிகள் மீள ஆரம்பிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
ரஸ்ய படையெடுப்பு காரணமாக கடந்த பெப்ரவரி மாதம் 12ம் திகதி கனடா, உக்ரேய்னுக்கான தூதரகத்தை மூடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.