கனடாவில் கடவுச்சீட்டு பெற்றுக்கொள்வதில் கால தாமதம் ஏற்படுவதாக மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
கடந்த 2020 ஏப்ரல் மாதம் முதல் 2021 மார்ச் மாதம் வரையிலான காலப் பகுதியில் 363000 கடவுச்சீட்டுக்கள் மட்டுமே விநியோகம் செய்யப்பட்டிருந்தது.
எனினும் அதற்கு அடுத்த ஆண்டில் கடவுச்சீட்டு விநியோகம் 1.3 மில்லியனாக அதிகரித்துள்ளது.
நாள் தோறும் கடவுச்சீட்டு கோரி செய்யும் விண்ணப்பங்கள் அதிகரித்துச் செல்வதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பெருந்தொற்று காலப்பகுதியில் பயணக் கட்டுப்பாடுகள் அதிகளவில் காணப்பட்ட காரணத்தினால் கடவுச்சீட்டு விநியோகம் வரையறுக்கப்பட்டிருந்த்து.
எனினும், தற்பொழுது அதிக எண்ணிக்கையிலானவர்கள் கடவுச்சீட்டுக்காக விண்ணப்பித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.