சைபர் குற்றவாளிகளிடமிருந்து பொதுமக்களை பாதுகாக்க, இந்திய அரசாங்கத்தின் உள்துறை அமைச்சகம் பல நடவடிக்கைகள், முயற்சிகள் மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளது.
சைபர் கிரைம் தடுப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக @cyberdost என்ற டுவிட்டர் பக்கத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.
அதில் வீடியோக்கள், புகைப்பட காட்சி மற்றும் படைப்புகள் மூலம் என இதுவரை 1066-க்கும் மேற்பட்ட இணைய பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு குறிப்புகள் பகிரப்பட்டுள்ளன. இதுவரை @cyberdost பக்கத்தை 3.64 லட்சத்திற்கும் அதிகமானோர் பின்தொடர்கிறார்கள்.
இதன் மூலம் பொதுமக்களுக்கு ரேடியோ பிரச்சாரம் மற்றும் சைபர் கிரைம் விழிப்புணர்வு தொடர்பாக 100 கோடிக்கும் அதிகமான எஸ்எம்எஸ் அனுப்பப்பட்டுள்ளது.
வீடியோக்கள்/GIF மூலம் சைபர் கிரைம் தடுப்பு மற்றும் சைபர் பாதுகாப்பு குறிப்புகள் பற்றிய விளம்பரம் மற்றும் விழிப்புணவு சீரான இடைவெளியில் மேற்கொள்ளப்படுகிறது.
மாணவர்களுக்கு கையேடு
சைபர் குற்றங்களைத் தடுக்கும் நோக்கத்திற்காக பல்வேறு ஊடகங்கள் மூலம் விளம்பரப்படுத்துவதற்காக MyGov உடன் I4C (இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையம்) இணைந்துள்ளது.
இதனுடன் இணைய பாதுகாப்பு என்ற தலைப்பில் இளம் வயதினருக்கும் மற்றும் மாணவர்களுக்கான கையேடு ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.
விழிப்புணர்வு வாரம்
அரசாங்க அதிகாரிகளின் நலனுக்காக “தகவல் பாதுகாப்பு சிறந்த நடைமுறைகள்” உள்ளிட்டவற்றை அரசாங்கம் வெளியிட்டுள்ளது.
இது பல்வேறு மாநிலங்களில் காவல் துறையுடன் இணைந்து C-DAC மூலம் இணைய பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு வாரங்களை ஏற்பாடு செய்துள்ளது.