எல்.ஐ.சி., நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீட்டின் போது, அதன் பங்குகளை வாங்க, ஆறு கோடிக்கும் அதிகமான பாலிசிதாரர்கள் ஆர்வமாக இருப்பதாக, முதலீடு மற்றும் பொது சொத்து மேலாண்மை துறை இயக்குனர் ராகுல் ஜெயின் கூறியுள்ளார்.
எல்.ஐ.சி., பங்கு வெளியீட்டின் போது, பங்குகளை வாங்க, கிட்டத்தட்ட ஆறு கோடிக்கும் அதிகமான பாலிசிதாரர்கள் தயாராக உள்ளனர்.பங்குகளை வாங்க விண்ணப்பிக்க ஏதுவாக, கிட்டத்தட்ட 6.48 கோடி பாலிசிதாரர்கள், தங்களுடைய பான் எண்ணை, பாலிசி தகவல்களுடன் இணைத்துள்ளனர்.
கடந்த பிப்ரவரி 28ம் திகதிக்குள்ளாக, பாலிசி தகவல்களுடன் பான் எண்ணை இணைத்து, ‘டிமேட்’ கணக்கும் உடையவர்கள், பங்கு வெளியீட்டில் பங்கேற்க தகுதி ஆனவர்கள்.
இதுவரை, 1.21 கோடி டிமேட் கணக்குகள் பாலிசிதாரர்களால் துவங்கப்பட்டு உள்ளன.
பங்கு வெளியீட்டின்போது, பாலிசிதாரர்களுக்கு 10 சதவீத பங்குகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. மேலும், பாலிசிதாரர்களுக்கு 60 ரூபாய் தள்ளுபடி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.