சீனாவில் ஆறு மாடி அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விழுந்தது. இடிபாடுக்குள் சிக்கியுள்ள 23 பேரை மீட்கும் பணி தீவிரமாக நடக்கிறது.
நம் அண்டை நாடான சீனாவின் ஹூனான் மாகாணம் வாங்செங் மாவட்டம் சங்க்ஷா நகரில் ஆறு மாடி அடுக்குமாடி குடியிருப்பு நேற்று திடீரென இடிந்து விழுந்தது.
இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த ஐந்து பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும், 23 பேர் சிக்கியிருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் அங்கு வசித்த 39 பேரை காணவில்லை என்றும் கூறப்படுகிறது.
மீட்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. அடுக்குமாடி குடியிருப்பின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.