கேரளாவில் ‘ஷவர்மா’ என்ற அசைவ உணவு சாப்பிட்ட சிறுமி உயிரிழந்தார். மேலும், 10 சிறுமியர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கேரளாவின் காசர்கோடு அருகே கரிவல்லூர் என்ற இடத்தில் ‘ட்யூஷன்’ படிக்கச் சென்ற மாணவியர், அருகேயிருந்த ஒரு கடையில் ஷவர்மா என்ற அசைவ உணவு சாப்பிட்டனர். திடீரென அவர்கள் அனைவரும் மயங்கி விழுந்தனர். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதில், தேவானந்தா, 16 என்ற சிறுமி உயிரிழந்தார்.
மற்றவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஷவர்மா என்பது கோழி இறைச்சியில் தயாரிக்கப்படும் உணவு வகை. மாணவியர் சாப்பிட்ட ஷவர்மா பரிசோதனை மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்தக் கடைக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.