வதிவிடப்பாடசாலை மாணவர்கள் பற்றிய விபரங்களை வெளியிட உள்ளதாக கான்டபரி பேராயர் ஜஸ்ரின் வெல்பி உறுதிமொழி வழங்கியுள்ளார்.
இங்கிலாந்தின் அங்கிலிக்கன் தேவாயலத்தில் பேணப்பட்டு வரும் தகவல்களை வழங்கத் தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கனடாவில் வதிவிடப் பாடசாலைகளில் கற்ற பழங்குடியின சிறார்கள் இனச்சுத்திகரிப்பிற்கு உள்ளாக்கப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இந்தக் குற்றச்சாட்டுக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், வதிவிடப்பாடசாலைகளில் பற்ற மாணவர்கள் பற்றிய விபரங்களை வெளியிடப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தம்மாலான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என பேராயர் குறிப்பிட்டுள்ளார்.