Home உலகம் அமெரிக்க உளவு சி.ஐ.ஏ.,வின் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக …

அமெரிக்க உளவு சி.ஐ.ஏ.,வின் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக …

by Jey

அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ.,வின் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக இந்திய வம்சாவளியை சேர்ந்த நந்த் முல்சந்தானி நியமிக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்காவின் தகவல் தொழில்நுட்ப நகரமான சிலிகான் பள்ளத்தாக்கில் 25 ஆண்டுகள் பணியாற்றியவர் நந்த் முல்சந்தானி. இவர், அமெரிக்க ராணுவத்தின் தகவல் தொழில்நுட்ப துறையிலும் பணியாற்றி உள்ளார்.

டில்லியில், 1979 – 87 வரை பள்ளியில் படித்த நந்த் முல்சந்தானி, பின்னர் அமெரிக்கா சென்றார். அங்கு, கம்ப்யூட்டர் சயின்ஸ், கணிதம் உள்ளிட்ட பிரிவுகளில் பட்டப்படிப்பு முடித்தார்.

ஹார்வார்ட் பல்கலையில் உயர் கல்வி பயின்றார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நந்த் முல்சந்தானி, அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ.,வின் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதை, சி.ஐ.ஏ., இயக்குனர் வில்லியம் ஜே.பர்ன்ஸ் நேற்று உறுதி செய்தார்.

related posts