Home இந்தியா ஆட்சி என்பது சொகுசு வாழ்க்கைக்கான பதவி இல்லை – ஸ்டாலின்

ஆட்சி என்பது சொகுசு வாழ்க்கைக்கான பதவி இல்லை – ஸ்டாலின்

by Jey

ஆட்சி என்பது சொகுசு வாழ்க்கைக்கான பதவி இல்லை’ எனப் பேசியுள்ள முதல்வர் ஸ்டாலின், ஆட்சியில் இருந்தால் மக்களுக்கு தொண்டாற்றலாம், ஆட்சியில் இல்லை எனில் மக்களுக்குப் போராடலாம்’ எனவும் கூறியுள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் மாற்று கட்சியில் இருந்து 3000 பேர் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுக.,வில் இணைந்தனர். இந்நிகழ்ச்சியில் ஸ்டாலின் பேசியதாவது: தமிழகத்தில் ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தமிழருக்காக குரல் கொடுப்பது திமுகதான்.

திமுகதான் விடிவெள்ளி, உற்ற தோழன், நம்மை காக்கும் பேரியக்கம் என்ற நம்பிக்கையோடு அனைவரும் இணைய வந்துள்ளீர்கள். திமுக.,வின் வரலாறு என்பது 73 ஆண்டுகளைக் கொண்டது. இன்னும் 2 ஆண்டுகளில் திமுக 75வது ஆண்டை கொண்டாட இருக்கிறது.

1949ம் ஆண்டு சென்னை ராபின்சன் பூங்காவில் கொட்டும் மழையில் திமுக தொடங்கப்பட்டது. ஆனால், உடனே தேர்தலை சந்திக்கவில்லை. 1957ல் திமுக முதன் முதலாக தேர்தல் களத்தில் இறங்கியது.

அப்போது 15 இடங்களில் திமுக வென்றது. 1962ம் ஆண்டு தேர்தலில் திமுக 50க்கும் மேற்பட்ட இடங்களில் வென்று எதிர்க்கட்சியானது. 1967ம் ஆண்டு அண்ணா தலைமையில் ஆட்சிப் பொறுப்பேற்றோம். 1971ல் கருணாநிதி தலைமையில் ஆட்சி அமைத்தோம்.

related posts