ஒன்றாரியோ மாகாணத்தில் லொத்தர் சீட்டிலுப்பில் 11 மில்லியன் டொலர் பணப்பரிசு வென்றெடுக்கப்பட்டுள்ளது.
649 லொட்டோ லொத்தர் சீட்டிலுப்பில் இவ்வாறு பரிசு வென்றெடுக்கப்பட்டுள்ளது.
பிரின்ஸ் ஒப் எட்வர்ட் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் இந்த லொத்தர் சீட்டை கொள்வனவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் ஒரு மில்லியன் டொலர் பெறுமதியான மற்றுமொரு பரிசுத் தொகையும் ஸ்காப்ரோ பகுதியைச் சேர்ந்த ஒருவரினால் வெல்லப்பட்டுள்ளது.
எதிர்வரும் 4ம் திகதி நடைபெறவுள்ள சீட்டிலுப்பில் ஜாக்பொட் பரிசுத் தொகை ஐந்து மில்லியன் என்பது குறிப்பிடத்தக்கது.