உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்கிம்பூர் கேரி அருகே நயபூர்வா கிராமத்தை சேர்ந்தவர் கடந்த ஏப்.,30ம் திகதி கோவிட் 2வது தவணை தடுப்பூசி செலுத்த அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
அப்போது மருத்துவமனை ஊழியர் அவருக்கு தவறுதலாக வெறிநாய்க்கடி தடுப்பூசியை செலுத்தியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து போலீசில் அந்த நபர் புகார் அளித்தார்.
தடுப்பூசி செலுத்திக்கொண்டவருக்கு இதுவரை எந்தவிதமான ஆபத்தும் இல்லை என்றாலும் மருத்துவமனை நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.