கொரோனா கட்டுப்பாடுகளால் சீனாவில் மே தின விடுமுறை கொண்டாட்டம் பொலிவு இழந்தது.
நம் அண்டை நாடானா சீனாவில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது. ஷாங்காய் பீஜிங் நகரங்களில் தொற்று பரவல் தீவிரமடைந்துள்ளது.
சீனாவில் ஆண்டுதோறும் மே தினத்தை ஒட்டி நான்கு நாட்கள் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். இந்த விடுமுறை நாட்களில் சீன மக்கள் சுற்றுலா செல்வர்.
ஆனால் தற்போது கொரோனா பரவலை தடுக்க சீனாவில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
சீனாவில் வரும் 4ம் திகதி வரை மே தின விடுமுறை அறிக்கப்பட்டுள்ளது. ஆனால் தொற்று பரவல் காரணமாக சுற்றுலா தலங்கள் பூங்காங்கள் உள்ளிட்ட இடங்களில் மக்கள் அதிகளவில் கூடதடை விதிக்கப்பட்டுள்ளது. மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கியதால் மே தின விடுமுறை பொலிவு விழந்தது.