Home இலங்கை இலங்கையின் எரிபொருள் விநியோக கட்டமைப்பை தன் வசப்படுத்திக்கொண்ட – இந்தியா

இலங்கையின் எரிபொருள் விநியோக கட்டமைப்பை தன் வசப்படுத்திக்கொண்ட – இந்தியா

by Jey

இந்திய இறக்குமதி மற்றும் ஏற்றுமதி வங்கி வழங்கும் 200 மில்லியன் அமெரிக்க டொலர் குறுகிய கால கடன் வசதியின் கீழ் இந்திய எண்ணெய் நிறுவனத்திடம் இருந்து டீசல் மற்றும் பெட்ரோலை கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

டீசல் மற்றும் பெட்ரோலை கொள்வனவு செய்ய நான்கு விலை மனுக்கள் கோரப்பட்டிருந்ததுடன் அமைச்சரவை நியமித்த சிறப்பு நிலையான கொள்முதல் குழுவின் பரிந்துரைக்கு அமைய இந்திய எண்ணெய் நிறுவனத்திற்கு ஒப்பந்ததை வழங்க மின் வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இலங்கையின் எரிபொருள் விநியோக கட்டமைப்பை முழுமையாக இந்தியா தன் வசப்படுத்திக்கொண்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தி வரும் நிலையில், இந்திய எண்ணெய் நிறுவனத்திற்கு இந்த ஒப்பந்தத்தை வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

related posts