அமெரிக்க கனேடிய எல்லைப் பகுதியில் ட்ரோன் மூலம் ஆயுதங்கள் கடத்தப்பட்ட சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
தென்கிழக்கு ஒன்றாரியோ பகுதியில் இந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த ட்ரோன் மரமென்றில் மோதி சிக்குண்ட நிலையில் பொலிஸார் அதனை கைப்பற்றியுள்ளனர்.
இந்த ட்ரோனில் பொருத்தப்பட்டிருந்த பையில் சுமார் 11 கைத்துப்பாக்கிகள் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த ஆயுதங்கள் அமெரிக்காவிலிருந்து கொண்டு வரப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த கைத்துப்பாக்கிகள் கனேடிய உற்பத்திகள் கிடையாது என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.