ஒன்றாரியோ மாகாண சட்ட மன்றம் கலைக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மாகாண முதல்வர் டக் போர்ட் இது தொடர்பில் அதிகாரபூர்வமாக ஆளுனர் நாயகத்திடம் இன்றைய தினம் கோரிக்கை விடுக்க உள்ளார்.
சட்டமன்றம் கலைக்கப்பட்டதன் பின்னர் தேர்தல் காலம் ஆரம்பமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
எதிர்வரும் ஜூன் மாதம் 2ம் திகதி சட்ட மன்ற தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
டக் போர்ட் தலைமையிலான முற்போக்கு கன்சர்வேட்டிவ் கட்சி மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் என கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
இம்முறை தேர்தலில் தற்போதைய எதிர்க்கட்சியான என்.டி.பி.யை விடவும் லிபரல் கட்சி கூடுதல் பலம் பெற்றுக் கொள்ளும் என மேலும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.