சஸ்கட்ச்வானில் குறைந்தபட்ச சம்பளத் தொகை அதிகரிப்பு அமுல்படுத்தப்பட உள்ளது.
எதிர்வரும் ஓக்ரோபர் மாதம் 1ம் திகதி தொடக்கம் குறைந்த பட்ச சம்பளத் தொகை நிர்ணயம் அதிகரிக்கப்பட உள்ளது.
இதன்படி, ஒக்ரோபர் மாதம் முதல் ஒரு மணித்தியாலத்திற்கான குறைந்தபட்ச சம்பளம் 13 டொலர்களாக அதிகரிக்கப்பட உள்ளது.
எதிர்வரும் 2024ம் ஆண்டில் இந்த தொகை மணித்தியாலத்திற்கு 15 டொலர் என்ற அடிப்படையில் அதிகரிக்கப்பட உள்ளது.
மாகாணத்தின் குறைந்தபட்ச சம்பளத் தொகையை மேலும் அதிகரிப்பதற்கு முயற்சிக்கப்பட்டு வருவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
சஸ்கட்ச்வானில் தற்பொழுது மணித்தியாலம் ஒன்றுக்கு 11.81 டொலர்கள் குறைந்த பட்ச சம்பளமாக காணப்படுகின்றது.