அரசு முறைப்பயணமாக ஐரோப்பிய நாடுகளான ஜெர்மன், டென்மார்க் , பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று முன்தினம் ஜெர்மன் சென்றார்.
முதலில் அவர் நேற்று முன்தினம் ஜெர்மனி தலைநகர் பெர்லின் போய்ச் சேர்ந்தார். அங்கு அவர் அந்த நாட்டின் பிரதமர் ஒலாப் ஸ்கோல்ஸை சந்தித்து இரு தரப்பு பேச்சு வார்த்தை நடத்தினார். அதைத் தொடர்ந்து 9 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
ஜெர்மனி பயணத்தை முடித்து கொண்ட பிரதமர் மோடி டென்மார்க் வருகை தந்தார். கோபன்ஹேகன் நகரில் பிரதமர் மோடியும், டென்மார்க் பிரதமர் மெட்டே பிரடெரிக்சனும் நேற்று பேச்சு வார்த்தை நடத்தினர்.அதைத் தொடர்ந்து 9 ஒப்பந்தங்கள் இரு நாடுகள் இடையே கையெழுத்தாகின.
அவை இடப்பெயர்வு, பசுமை கப்பல் போக்குவரத்து சீர்மிகு மையம் அமைத்தல், இரு தரப்பு கலாசார பரிமாற்ற திட்டம், ஜல்சக்தி அமைச்சகம்- டென்மார்க் சுற்றுச்சூழல் அமைச்சகம் தொடர்பான ஒப்பந்தம், திறன் மேம்பாட்டில் ஒத்துழைப்பு, கால்நடை வளர்ப்பு-பால்பண்ணை, மந்திரிகள் மட்டத்திலான எரிசக்தி கொள்கை பேச்சு வார்த்தை, சர்வதேச நுண்ணுயிர் எதிர்ப்பு தீர்வு மையத்தில் இந்தியா சேர்வதற்கான ஒப்பந்தம், ஸ்டார்ட் அப் நிறுவனங்களை தொடங்குவதில் ஒத்துழைப்பை எளிதாக்கும் டென்மார்க் தொழில்நுட்ப பல்கலைக்கழகம், இன்வெஸ்ட் இந்தியா ஒப்பந்தம் ஆகும்.
இந்தநிலையில், டென்மார்க் வருகை தந்தார். அவரை டென்மார்க் பிரதமர் மேட் பிரெட்ரிக்சன் வரவேற்றார். தொடர்ந்து டென்மார்க் ராணி இரண்டாம் மார்க்கெரத்தை அரண்மணையில் சந்தித்து பேசினார் இன்று பிரான்ஸ் செல்கிறார் பிரதமர்