Home இந்தியா 184 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிரந்தர வெள்ள தடுப்பு பணிகள்

184 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிரந்தர வெள்ள தடுப்பு பணிகள்

by Jey

சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் 184 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிரந்தர வெள்ள தடுப்பு பணிகளை மேற்கொள்ள, நிதித்துறை ஒப்புதல் வழங்கியுள்ளது.

வடகிழக்கு பருவமழையால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலுார் மாவட்டங்கள் அதிக சேதத்தை எதிர்கொண்டு வருகின்றன.

கடந்த 2021ம் ஆண்டு கொட்டிய கன மழையால், இம்மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது. இம்மாவட்டங்களில் நிரந்தர வெள்ள தடுப்பு பணிகளை மேற்கொள்ள அரசு முடிவெடுத்துள்ளது.

இதற்காக, சட்டசபையில், நீர்வளத்துறை மானிய கோரிக்கை விவாதத்தின்போது, இரண்டு முக்கிய அறிவிப்புகள் வெளியானது. அதன்படி, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் அடையாறு, கொசஸ்தலையாறு ஆகியவற்றின் உப வடிநிலங்களில் எட்டு வெள்ள தடுப்பு பணிகளுக்கு, 250 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதற்கான பணிகள் துவங்கி நடந்து வருகிறது.இதேபோல, சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில், கோவளம் உபவடி நிலத்தில் உள்ள செம்மஞ்சேரி, பெரும்பாக்கம், தாம்பரம், சோழிங்கநல்லுார், ஆலந்துார் ஆகிய பகுதிகளில் நான்கு நிரந்தர வெள்ள தடுப்பு பணிகள் 184.22 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும் எனவும் அறிவிக்கப்பட்டு இருந்தது.

இப்பணிகளுக்கு நிதி ஒதுக்கீட்டை உறுதி செய்து அரசாணை இன்னும் பிறப்பிக்கவில்லை. அதே நேரத்தில், பணிகளை துவங்குவதற்கு ஒப்பந்ததாரர் தேர்வை நடத்த நிதித்துறை ஒப்புதல் வழங்கியுள்ளது. எனவே, இதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளும்படி, தொடர்புடைய அதிகாரிகளுக்கு, நீர்வளத்துறை செயலர் சந்தீப் சக்சேனா உத்தரவிட்டுள்ளார்.

 

மேற்கொள்ளப்பட உள்ள பணிகள்: அதன்படி, செங்கல்பட்டு மாவட்டம் செம்மஞ்சேரி மற்றும் பெரும்பாக்கத்தில் ஒட்டியம்பாக்கம் கால்வாய், மதுரபாக்கம் வடிகால் முதல் பள்ளிக்கரணை சதுப்பு நிலம் வரை 96 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கால்வாய் அமைக்கப்படவுள்ளது ஒட்டியம்பாக்கம் ஏரியில் இருந்து அரசன் கழனி ஏரி வரை, விடுபட்டுள்ள கால்வாயை, அகலமான வடிகால் வாயிலாக பள்ளிக்கரணை கழுவேலியில் இணைக்கும் பணிகள் 68.82 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படவுள்ளது.

சென்னை மாவட்டத்தில் சோழிங்கநல்லுார் ஒக்கியம் மடுவை, கே.சி.ஜி., கல்லுாரி முதல் பகிங்ஹாம் கால்வாய் வரை துார்வாரி, ஆழப்படுத்துதல், அகலப்படுத்துதல் பணிகள் ௫ கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படஉள்ளது= ஆலந்துார் அடுத்த ஆதம்பாக்கம் ஏரியில் இருந்து வீராங்கால் ஓடை வரை உள்ள இணைப்பு கால்வாயை மேம்படுத்தும் பணிகள், 13.90 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட உள்ளது. பல்வேறு பணிகளாக பிரித்து, இவற்றை நீர்வளத் துறையினர் மேற்கொள்வதற்கு தயாராகிஉள்ளனர். இம்மாத இறுதிக்குள் பணிகளை துவங்கி செப்., மாத இறுதிக்குள் முடிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

related posts