வெள்ளை மாளிகையின் வரலாற்றில் முதல்முறையாக கருப்பினத்தை சேர்ந்த பெண், செய்தி தொடர்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்க அதிபரின் அதிகாரப்பூர்வ இல்லமான வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளராக ஜென் சாக்கி உள்ளார்.
இவரது பதவிக் காலம் முடிவுக்கு வந்துள்ளதை அடுத்து, புதிய செய்தி தொடர்பாளராக கேரைன் ழான்பியர், 44, என்ற கருப்பினத்தை சேர்ந்த பிரெஞ்ச் – அமெரிக்க பெண் நியமிக்கப்பட்டுள்ளார்
.வெள்ளை மாளிகை வரலாற்றில் இந்த பதவியை வகிக்கும் முதல் கருப்பின பெண் என்ற பெருமையை கேரைன் பெற்றுள்ளார். இவர், ‘கே’ எனப்படும், தன்பாலின ஈர்ப்பாளர் என்பதை வெளிப்படையாக தெரிவித்தவர்.
அதிபர் ஜோ பைடனின் தேர்தல் பிரசார ஆலோசகராக இருந்த கேரைன், துணை அதிபர் கமலா ஹாரிசின் அதிகாரிகள் குழுவுக்கு தலைமை வகித்தார்.
வெள்ளை மாளிகையின் தகவல் தொடர்பு குழுவின் மூத்த அதிகாரியாகவும் பதவி வகித்து உள்ளார். அதன் பின், துணை செய்தி தொடர்பாளராக நியமிக்கப்பட்ட கேரைனுக்கு தற்போது பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இவர் மே16ல் பதவி ஏற்க உள்ளார்.